வீதிகளில் உலா வந்த முதலை குட்டி: அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு, பெருங்களத்தூர் சாலையில் சிறிய முதலைக்குட்டி ஒன்று நேற்றிரவு சுற்றி தெரிந்ததை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரவு 10 மணியளவில் சாலை ஓரத்தில் முப்புதரில் பதுங்கி இருந்த முதலைக்குட்டியை பிடித்து அதனை கிண்டி பூங்காவிற்கு கொண்டு சென்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருங்களத்தூர் அடுத்துள்ள நெடுங்குன்றம் சாலையில் மழை வெள்ளத்தின் போது சுமார் 10 அடி நீளம் உள்ள பெரிய முதலை சாலையில் நடந்து சென்றது. 

தற்போது பெருங்களத்தூரில் முதலைக் குட்டி உள்ளது. இந்நிலையில் பெருங்களத்தூரில் காணபட்ட 5வது முதலை என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து வனத்துறை அதிகாரி தெரிவித்திருப்பதாவது, தற்போது பிடிக்கப்பட்ட இந்த முதலைக்குட்டி சதுப்பு நில பகுதிகளில் காணப்படும் மக்கர் இனத்தைச் சேர்ந்தது. நெடுங்குன்றம் ஏரி, ஆலப்பாக்கம் ஏரிகளிலும் முதலைகள் உள்ளது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perungalathur baby crocodile trapped road


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->