சென்னையில் இன்று தனியார் பள்ளிகள் இயங்குமா.? இயங்காதா.? .. குழப்பத்தில் பெற்றோர்கள்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நேற்று நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் பள்ளியின் மீது கல்வீச்சு, பேருந்துக்கு தீ வைத்தல் உள்ளிட்ட கலவர செயல்களில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார் இன்று முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனியார் பள்ளிகள் இதுபோல் விடுமுறை விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் தனியார் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள் இயக்கம் குறித்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பள்ளிகள் தனித்தனியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பள்ளிகள் இயக்கம் குறித்து எந்த தகவலும் முறையாக கிடைக்கப்பெறாத பெற்றோர்கள் இன்று பள்ளிகள் இயங்குமா? இயங்காதா? என குழப்பத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parents are confused today schools working or holiday


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->