இரண்டு மலைகளுக்கு இடையில்.. ஓவியம் போல் காட்சி தரும் அழகு..! - Seithipunal
Seithipunal


பாபநாசம் அணை திருநெல்வேலியில் இருந்து ஏறத்தாழ 53கி.மீ தொலைவிலும், பாபநாசத்திலிருந்து ஏறத்தாழ 3கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து ஏறத்தாழ 105கி.மீ தொலைவிலும் அமைந்து ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகின்றது.

பாபநாசம் அணை மேற்கு தொடர்ச்சியில் உள்ள பொதிகை மலையில் கட்டப்பட்டுள்ளது. 

இந்த அணை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பாபநாசம் அருவிக்கு மிக அருகாமையில் உள்ளது. 

பாபநாசம் அணையில் புனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.

சிவபெருமானும், பார்வதி தேவியும் அகஸ்திய முனிவருக்கு காட்சி தந்து அருளிய இடமாக இது கருதப்படுவதால், இது ஒரு புண்ணிய ஸ்தலமாகவும் திகழ்கிறது. 

மலைகளாலும், மரங்களாலும் சூழ்ந்துள்ள இந்த அணையை பார்ப்பதற்கு ஒரு அழகிய ஓவியம் போல் இருக்கும். இரண்டு மலைகளுக்கு இடையே அழகாக கட்டப்பட்டுள்ளது இவ்வணை. 

அதனாலேயே பல சுற்றுலாப்பயணிகளை இவ்விடம் அதிகம் கவர்கிறது. பாபநாசம் வரும் பயணிகள் பெரும்பாலும் அகஸ்தியர் அருவியிலும், தலையணையிலும் குளித்து மகிழ்வர். 

பாபநாசம் அணைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அணையில் படகு சவாரி செய்து அக்கரைக்கு சென்று பாணத் தீர்த்த அருவியில் குளிப்பது பெரிதும் கவர்ந்துள்ளது. 

இதனால் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. 

விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் படகில் பயணம் செய்து மகிழ்ச்சியாக இருக்க ஏற்ற இடமாக இருக்கிறது இந்த பாபநாசம் அணை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

papanasam dam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->