தூத்துக்குடி – பக்தர்கள் இன்றி நடக்கிறது தூய பனிமயமாதா ஆலய திருவிழா..! - Seithipunal
Seithipunal


பக்தர்கள் இன்றி எளிமையாக பனிமயமாதா ஆலய திருவிழா நடைபெறுகிறது.

தூத்துகுடியில் ஒவ்வொரு ஆண்டும் பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம்.  இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பர். அதன் படி தூய பனிமயமாதா ஆலயத்தின் 439 ஆவது பெருவிழா கொடியேற்றதுடன் கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  

அதனைத்தொடர்ந்து பேராலயத்தில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை போன்ற வழக்கமான வழிபாடுகள் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில், தூய பனிமயமாதா திருத்தலப் பேராலய திருவிழா நிறைவு நாள் விழா இன்று நடைபெறுகிறது.

வழக்கமாக நடைபெறும் சப்பர பவனிகள் நடைபெறாது எனவும். ஆனால், வழக்கமாக நடைபெறும் ஆராதனைகள் பக்தர்கள் இன்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இருப்பினும் அத்தியாவச பணியாளர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என அறிவிக்கபட்டுள்ளது. மேலும், கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உள்ளூர் தொலைகாட்சிகளிலும், யூ-டியுப் சேனல்களிலும் நேரடி ஒளிப்பரவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். 

இந்த விடுமுறைக்கு பதிலாக 07.08.2021 அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panimayamathaa Temple Festival Without Devotees in thoothukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->