மதுரை: மினி வேன் கவிழ்ந்து விபத்து.! 10-க்கும் மேற்பட்டோர் காயம் - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சென்று விட்டு 24 பேருடன் மதுரை நோக்கி மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மதுரை பாண்டி கோவில் அருகே மினி வேன் சென்றபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாட்டுத்தாவணி போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Over 10 injured in mini van overturned in madurai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->