பல்வேறு அதிர்ச்சிகளுக்கு பிறகு., ஓபிஎஸ், இபிஎஸ் ஒன்றாக எடுத்த முடிவு.!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் செல்வம் என்பவர் கடந்த 17ஆம் தேதி கடத்தி கொலை செய்யப்பட்டார். இதில் அதிமுக நிர்வாகி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. நிலத்தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இதற்கு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து, ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். மேலும், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் செல்வனின் உறவினர்கள் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும் மற்றும் செல்வனின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் செய்து வருகின்றனர். உடலையும் வாங்க மறுத்துள்ளனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய திருமணவேல் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துள்ளனர். அத்துடன், அதிமுகவினர் யாரும் திருமணவேலுடன் எந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளகூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops eps remove thuthukudi admk administrator who linked with murder case 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->