ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளரை எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

மனுவை விசாரித்த நீதிபதி, கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு பன்னீர் செல்வத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், கட்சியினுடைய கொடி, சின்னம் பயன்படுத்தக்கூடாது என்ற நீதிபதியின் இடைக்கால உத்தரவு இறுதி தீர்ப்பு போல் அமைந்துள்ளது. 

இதனால் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதேபோல் அதிமுகவில் மூன்று கோடிகள் உள்ள நிலையில் எந்த கொடியை பயன்படுத்த தடை விதிக்க ப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி கோருகிறார். 

அண்ணா விரல் காட்டுவது போல் இருப்பது தான் உண்மையான கொடி என்றும் அதை பன்னீர்செல்வம் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆதரவாக உள்ள நிலையில் அவர்களுக்கு எப்படி இந்த தடை விதிக்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது. 

இந்த வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியதை கீழ் நீதிபதி அமர்வு உறுதி செய்துள்ளது. கட்சியில் உறுப்பினராக இல்லாத போது கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை எப்படி பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பப்பட்டது. 

இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Appeal dismissed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->