ஒரே பைக்.. மூன்று விலை - வேட்பு மனுவில் வெளியான அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தேர்தல் நாள் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே Know Your Candidate என்னும் அடிப்படையில் சிலரின் வேட்புமனுக்களை ஆராய்ந்ததில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர வேட்பாளர் காளியம்மாள் வேட்பாளர் மட்டுமல்ல பேச்சாளரும் கூட. அதிரடியான பேச்சுகளுக்கு சொந்தக்காரரான இவர் கடந்த மூன்று தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். 

இந்த மூன்று தேர்தல்களுக்காகவும் அவர் தன் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். அந்த வேட்பு மனுவில், வாகனம் என்கிற பகுதியில் ஒரே வண்டிக்கு மூன்று வெவ்வேறு விலைப்பட்டியலுடன் தாக்கல் செய்திருக்கிறார். இந்த முறை காளியம்மாளின் கணவரிடம் இருக்கும் Bajaj Pulzer PY 02 J4591 என்கிற வாகனத்தின் விலை 60300 ரூபாய் என பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் இதே வண்டியில் விலை 30000 என்றும், கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அதே பைக்கின் விலை 20000 ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார். அதே போல், கடந்த 2021ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 2015ல் இருந்து வருமான வரி தாக்கல் செய்த தொகையையும், கடந்த 2019ல் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one bike three price ntk kaliammal info nomination


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->