ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு.. முன்பதிவு இன்று காலை தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓணம் பண்டிகை முன்னிட்டு பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் (06047) இயக்கப்பட உள்ளது.

அதன்படி, வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், இரணியல், நெய்யாடின்கரா திருவனந்தபுரம் சென்ட்ரல் வழியாக மறுநாள் காலை 8 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.

அதேபோல், மறு மார்க்கமாக ஆகஸ்ட் 27ஆம் தேதி பகல் 11:40 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06048) 28ம் தேதி அதிகாலை 2:45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

இந்த நிலையில் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Onam special train booking open


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->