அவங்களுக்கும் பசிக்கும்ல.. ED ரெய்டுக்கு நடுவே 15 பர்கர்கள் ஆர்டர்!! - Seithipunal
Seithipunal


திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் அவருடைய மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணி ஆகியோரின் வீடு, அலுவலகம், பொன்மூடியின் குடும்பத்திற்கு சொந்தமான சூரியா அறக்கட்டளை, கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது அவருடைய மகன் கௌதம் சிகாமணி மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என 7 பேருக்கு சட்டவிரோதமாக செம்மண் குவாரி அமைக்க அனுமதி வழங்கியதில் அரசுக்கு ரூபாய் 28 கோடி வரை இழப்பு ஏற்பட்டது தொடர்பான வழக்கில் கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த தடையில்லை என தீர்ப்பு வழங்கியது.

அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள அமைச்சரின் வீட்டில் இன்று காலை 7:30 மணிக்கு தொடங்கிய சோதனை பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சைதாப்பேட்டை ஸ்ரீதர் வடக்கு காலணியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தற்பொழுது வரை சோதனை நீடித்து வருவதால் மதிய உணவிற்காக சுமார் 15 பர்கர் ஸ்விக்கி நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த ரூ.175 மதிப்புள்ள 15 பர்கர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. சோதனை இரவு வரை நீடிக்கும் என்பதால் உணவு ஆர்டர் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Officers Ordered 15 burgers amidst Ponmudi house ED raid


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->