“காவலன் SOS” செயலி வைத்திருந்தால் 10 சதவீதம் தள்ளுபடி.! - Seithipunal
Seithipunal


காவலன் செயலி வைத்திருக்கும் பெண்களுக்கு 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கி அசத்தி வரவும் இளைஞர்.

பெண்களின் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறை பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய காவலன் என்ற செயலி  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியினை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்க தமிழக அரசு மற்றும் காவல்துறை பல வகைகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 

இந்த நிலையில், மதுரை பொன்மேனி பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய உணவகம் நடத்தி வருபவர் ராஜபிரபு என்ற இளைஞர், இவர் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ள பெண்களுக்கு தமது உணவகத்தில் உணவு சாப்பிடும் கட்டணத்தில் 10 விழுக்காடு தள்ளுபடி தரப்படும் என அறிவித்துள்ளார்.

காவலன் செயலி குறித்து எதுவும் தெரியாமல் உணவகத்துக்கு வரும் பெண்களுக்கும் அதுகுறித்து விளக்கி, அந்த பெண்களின் செல்போன்களில் காவலன் செயலியை ராஜபிரபு தரவிறக்கம் செய்து தருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

offer for kavalan police app


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->