நாம் ஏன் ரோட்டுல நிர்வாண போராட்டம் நடத்தக்கூடாது? பொள்ளாச்சி விவகாரத்தில் ஆவேசமான முக்கிய பிரபலம்.! - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக்கொடூர கும்பல் 7 ஆண்டுகளாக சமூகவலைத்தளங்கள் மூலம்  200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து, மேலும் அதனை வீடியோவாக எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வீடியோவும் வெளியானது. அந்த வீடியோவில் இருந்து வந்த அந்த பெண்ணின் அலறல் பலரின் நெஞ்சையும் பதைபதைக்க வைத்தது. இதற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டுமெனவும் குரல்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இந்த கொடூரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பெண்களுக்கு தைரியம் அளிக்கும் வகையிலும் எழுத்தாளர் நிர்மலா கொற்றவை பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, பொள்ளாச்சி கொடூரத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் குறைந்தப்பட்சம் அந்த விஷயத்தை வெளியில் கூற வேண்டும் அப்போதுதான் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்கும்.

மேலும் அந்த கொடூர மிருகங்களால்  கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக, நாம் ஏன்  மணிப்பூரில் ஏற்கனவே நடந்தது போன்று நிர்வாணமாக ரோட்டில் நடந்து சென்று கோட்டையை முற்றுகையிட கூடாது? என கேட்டுள்ளார். 

English Summary

nude strike in road for pollachi issue


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal