கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, சீமான் ஏகபோக பாராட்டு.!! - Seithipunal
Seithipunal


வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகர்வு என கூறியுள்ள சீமான் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, " கேரள முதல்வராக, தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் ஐயா பினராயி விஜயன் அவர்களுக்கும் அவரது தலைமையிலான அமைச்சரவையினருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஐயா பினராயி விஜயன் தலைமையிலான அரசு திறம்பட செயற்பட்டு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ஐயா பினராயி விஜயன் அவர்கள் முன்பைவிட மிகச்சிறப்பானதொரு நல்லாட்சியை வழங்கிட வாழ்த்துகிறேன்.

மேலும் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் தனது புதிய அமைச்சரவையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஐயா கே.இராதாகிருஷ்ணன் அவர்களை தேவசம் வாரிய அமைச்சராக நியமித்தது பாராட்டுதற்குரிய வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகர்வாகும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Seeman Wish to Kerala CM PInarayi Vijayan 21 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->