சின்னத்தை மாற்றுகிறார்கள் - தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி பரபரப்பு புகார்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை முடக்கி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. 

இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தங்களது கட்சியை ஆளும் வர்க்கம் முடக்க நினைப்பதாக சீமான் பரபரப்பான குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தார். இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னமாக மைக் வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட மைக் சின்னத்தையும் மாற்றுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, "நாம் தமிழர் கட்சிக்கு ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்டப்படும் வயிற்றினத்தில் ஸ்விட்ச் இருக்கிறது. இதுபோன்று தங்களது சின்னத்தை மாற்றி ஒட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk petition to election commission for symbol change


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->