கடன் வாங்கி படிக்கும் நிலைக்கு ஏன் தள்ளினீர்கள்? - சராமாரியாக கேள்வி எழுப்பும் சீமான்.! - Seithipunal
Seithipunal


வருகிற 19 ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், "நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அரக்கோணம் தொகுதியில் வேட்பாளர் அப்சியா நஸ்ரினை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:- "

வரும் லோக்சபா தேர்தலில் நான்கு கட்சிகள் போட்டியிடுகின்றன. ஏற்கனவே அதிமுக, திமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளுமே பதவி அதிகாரத்தில் இருந்து மக்களை ஆட்சி செய்தவர்கள். ஆனால் அந்த ஆட்சியாளர்கள் அவர்கள் செய்த ஒரு நன்மையை சொல்லி வாக்கு கேட்க முடியவில்லையே?.. பத்து ஆண்டுகாலம் ஆட்சி செய்த பாஜக, இந்த பத்து ஆண்டுகளில் இவ்வளவு நலத்திட்டங்களை செய்திருக்கிறோம் என்று சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை.

இவ்வளவு பெரிய நாட்டால் ஒரு தேர்வை கூட நடத்த முடியாவிட்டால் எப்படி?.. இந்திய நாட்டில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்க நிறுவனம் கடவுளிடம் வேண்டுதல் வைத்ததா? அவர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் தனியாருக்கு எடுத்து கொடுப்பதற்கே ஒரு அரசு ஒரு அதிகாரம் நிறுவப்படும் என்றால் அப்போது அரசின் வேலை என்ன?.. இந்த கேள்வி உங்களிடம் எழவில்லையா? ஏன் உங்களுக்கு கோபம் வரவில்லை?

கல்வி என்பது மானுட உரிமை அல்லவா?.. அதை பெற்று தருவது அரசின் கடமை அல்லவா?.. ஏன் கொடுக்கவில்லை. மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வேன் என்று சொல்கிறார்கள். கடன் வாங்கி படிக்கும் நிலைக்கு ஏன் தள்ளினீர்கள்? என்பதுதான் எங்கள் கேள்வி. விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்கிறார்கள்.. ஒரு நாட்டில் விவசாயியே கடனாளி ஆகிவிட்டால், அந்த நாடு எப்படி உறுப்படும்" என்று பரபரப்பாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk leader seeman election campaighn in arakonam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->