மது வியாபாரம் அருவருப்பான வர்த்தகம்: வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம், மயிலம்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை மூட உத்தரவிடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் உள்ள வேளாண் நிலங்கள் மறுவரையறை செய்யப்பட்டு கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அந்த அடிப்படையில் வேளாண் நிலங்களில் மதுபான கடைகள் அமைக்க எந்த சட்டமும் தடை செய்யவில்லை என்றும் கூறப்பட்டது. 

இதனை ஏற்று கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, மது வியாபாரம் ஒரு அருவருப்பான வர்த்தகம் என கருத்து தெரிவித்தது. அதேசமயம், வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகளை அமைக்க எந்த சட்டமும் தடை செய்யாத நிலையில், விதிகளை பின்பற்றி கடைகளை அமைக்க அனுமதியளித்து உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no restriction for opening tasmac


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->