கேமரா சர்ச்சை நாயகன் மீது பாய்ந்த வழக்கு..! கப்சிப்பாகும் நித்தி?., அடுத்தகட்ட அதிரடி திட்டம்..!! - Seithipunal
Seithipunal


சர்ச்சைகள் நாயகன்., லீலைகள் மன்னன்., வைரல் விடியோவிற்கும் - அர்த்தங்கள் நிறைந்த ஆழமான... ஆழமான பேச்சிற்கு சொந்தக்காரன் என்ற பெருமையையும்., தியானம் முடியும் வரையில் சூரியனையே காத்திருக்க வைத்த நித்தியானந்த சுவாமிகள் அவ்வப்போது தனது இணையப்பக்கத்தில் விடியோவை வெளியிட்டு., பக்தகோடிகளுக்கு அருளாசி வழங்குவது வழக்கம். 

அந்த வகையில்., தற்போது வெளியான வீடியோ காட்சியில் அருள் புரிந்த நமது நித்தியானந்த சுவாமிகள் தமிழ்நாட்டில் இருக்கும் சேலம் மேட்டூர் அணையில் இருக்கும் பழமையான சிவன் ஆலயத்தை தான் கட்டியதாகவும்., அந்த கோவிலில் உள்ள மூல லிங்கம் தன்னிடம் இருதாகவும் கூறியுள்ளார். மேலும்., இந்த கோவில் கட்டப்பட்டது என்னுடைய முன் ஜென்மத்தில் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவில் தனது பக்தர்களுக்கு பல விதமான ஆழ்ந்த ஆலோசனை வழங்கிய நிலையில்., பரவசத்தின் உச்சத்திற்கு சென்ற நித்தியானந்தா சுவாமிகள் தனது விடியோவை முடித்து கொண்டார். 

nithyananda, நித்தியானந்தா,

இந்த வீடியோ காட்சிகள் இணைய தளங்களில் பெரும் வைரலாகிய நிலையில்., இந்த விடியோவை கண்ட நெட்டிசன்களும் சிலையை மீட்க காவல் துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும்., சிலை கடத்தல் காவல் துறையினரும் தாமாக முன்வந்து., சுவாமியின் ஆலயத்தில் சோதனை மேற்கொண்டு மூல லிங்கத்தை மீட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும்., அண்மையில் வெளியான குருநாதர் புகைக்க., அருகில் இருக்கும் நாய் புகை விடும் என்று கூறியதை கேட்ட நித்தியானந்தாவின் உயிர் சீடர்கள் பெரும் ஆச்சர்யத்திற்கு உள்ளாகியது வைரலாகி வந்தது. 

இந்த நிலையில்., சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரை அடுத்துள்ள பாலவாடி பகுதியை சார்ந்த சக்திவேல்., வேலுசாமி மற்றும் இன்னும் சிலர் அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகாரை அளித்துள்ளனர். அந்த புகாரில்., மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம்., இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. 

சேலம் ஜலகண்டேஸ்வரர் ஆலயம்,

மேட்டூர் அணை கட்டப்பட்ட சமாய்த்தியில்., பாலவாடி கிராமத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டு இருந்தது. இந்த தருணத்தில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னால் இந்த கோவில் கட்டப்பட்டதாகவும்., இந்த கோவிலில் உள்ள மூலவர் லிங்க சிலையானது தன்னிடம் உள்ளதாகவும் தாமாகவே தெரிவித்துள்ளார். இதனால் அவரிடம் இருக்கும் மூலவர் லிங்கத்தை பெற்று தரவேண்டும் என்று கூறிஉல்ளனர். இதனை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nithyananda latest speech police complaint


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->