முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாத சிறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நீலகிரியில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலை நாடுகளில் மூன்றாம் கட்ட மற்றும் நான்காம் கட்ட கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்நாட்டின் மக்கள் ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைத்துக்கொண்டு வந்த கொரோனா பரவல், ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளை மக்கள் கடைபிடிக்க தவறியதால் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கொரோனா பரவல் அதிவீரியம் எடுக்கலாம் என்ற அச்சத்தில் சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிப்பு வெளியிட்டது. ஆந்திர பிரதேசம், கர்நாடகா, பாண்டிச்சேரி மாநிலத்தை தவிர்த்து, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். முகக்கவசம் அணியாத நபர்கள் மீது பொதுசுகாதார சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris Collector innocent Dhivya Order Without Face Mask Person 6 Month jail


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->