அடுத்த பிளானை அறிவிக்க போகும் தமிழக வெற்றிக் கழகம்.! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த மாதம் ஆரம்பித்தார். அறிவிப்பை வெளியிட்ட சில நாட்களிலேயே கட்சியின் பெயர் சர்ச்சையில் சிக்கியது. உடனே நடிகர் விஜய், கட்சிப் பெயரில் உள்ள பிழையை சரிசெய்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதையடுத்து கட்சியில் நிர்வாகிகள் தேர்வு ஒருபுறமும், மறுபுறம் அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை ஆன்லைனில் தான் நடைபெறும் என்றும் அதற்காக செயலி தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

அந்த செயலி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது தான் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக இருந்தது. கடந்த சில நாட்களாக விஜய் கட்சி குறித்த செய்திகள் எதுவும் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது அக்கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பிரத்யேக செயலி வருகிற புதன் அல்லது வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வரும். மே மாதத்திற்குள் அதிகபட்ச உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை கட்சிக்காக 100 மாவட்டங்களாக பிரித்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது. அதில், யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் தெரியவரும்" என்று தெரிவைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new update of tamilnadu vetrik kazhagam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->