ஜல்லிக்கட்டு வீரர்களின் உயிரைக் காப்பாற்ற புது ஐடியா - என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகை நாட்களில் தமிழர்களின் வீர விளையாட்டான இந்த விளையாட்டு ஒவ்வொரு வருடமும் மதுரை, அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் மிக விமர்சையாக நடைபெறும். இதற்கிடையே தமிழக அரசு சார்பில், ஜல்லிக்கட்டு போட்டிக்கென மதுரை அலங்காநல்லூர் பகுதியில் சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் 90% முடிவடைந்தது. 

சுமார் 3,000க்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் இந்த மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு எங்கே நடைபெறும்? என்று அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் அதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதில், ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் பாரம்பரிய இடங்களான அலங்காநல்லூரில் வருகின்ற ஜனவரி 17-ம் தேதியும், பாலமேட்டில் 16-ம் தேதியும், அவனியாபுரத்தில் 15-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம் போலவே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மதுரை பழங்காநத்தம் அரசு கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை தொடங்கியது. மாடுபிடி வீரர்களின் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி வைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். போதிய அளவில் பயன்பாட்டில் இல்லாததுடன் ஒரு ரப்பர் குப்பி 6 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறி மாட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new idea for save jallikattu competitors


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->