வெளிநாட்டில் உள்ளவர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய வசதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் படி, பொதுமக்களும் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு அருகிலுள்ள மின்வாரியத்திற்கு சென்றனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலை மோதியது.

இதற்காக தமிழக அரசு சிறப்பு முகாம்களை நடத்தியது. மேலும் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இந்த மாதம் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். 

அந்தவகையில் ஆதார் எண்களை சிறப்பு முகாம்கள் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் மின் இணைப்புடன் இணைக்கலாம் என்று தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டின் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் எவ்வாறு இணைப்பது என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆதார் எண்ணை இணைக்கும் இணையதள பக்கத்தில் நான்காவது விருப்பமாக என்.ஆர்.ஐ. பதிவிற்கான புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, வெளிநாட்டில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new facility in electric bill number add adhar number for foreigners


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->