தமிழகத்திற்கு அடுத்த புயல்? இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்!! - Seithipunal
Seithipunal


தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல், நேற்று முன்தின நள்ளிரவில் மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசியதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 

இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, வரும் 13-ந்தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உருவாக உள்ளது. இது புயலாக மாறுமா? என்பது அடுத்துவரும் நாட்களில் தெரியவரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய புயல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் புயலாக மாறி கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. 

அப்படி புயல் உருவாக்கினால் அது இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய புயல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New cyclone next week


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->