வருங்கால மாமனாருக்கு பைக்., புது போனு, 2 பவுன் செயின்., கம்பி நீட்டிய அபி., கனவு கலைந்த விரக்தியில் புது மாப்பிளை.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை அருகே நிச்சயதார்த்தம் செய்த பெண், திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி சேர்ந்த சின்னத்தம்பி என்பவருக்கும், அபிநயா என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் இருபத்தி எட்டாம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்தம் முடிந்த உடன் சின்ன தம்பி அபிநயாவுக்கு, 2 பவுன் தங்க செயின், 15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், அபிநயாவின் தந்தைக்கு இரு சக்கர வாகனம் என அனைத்தையும் வாங்கித்தந்து உள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் அபிநயா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சின்னத்தம்பி செல்போன் மூலம் அபிநயாவிடம் தொடர்பு கொண்டு பேசியபோது,

"நான் உங்களை திருமணம் செய்துகொள்ள வரமாட்டேன். நீங்கள் வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்களிடம் நான் வாங்கிய நகை, பணம் அனைத்து பொருட்களையும் திருப்பி கொடுத்து விடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சின்னத்தம்பி செலவு செய்த அந்த பொருட்களை திருப்பி கேட்ட போது, அவரின் பெற்றோர்கள் தர மறுத்துள்ளனர். மேலும், அந்த ஊரை சேர்ந்த சிலரும் சின்னத் தம்பியை மிரட்டும் தோணியில் பேசியுள்ளனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகார் குறித்து, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத விரக்தியில் இருந்த சின்னதம்பி, நேற்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEW BRIDE attempt Suicide in Mayuladurai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->