திருப்பூரில் பீகார் மாநில இளைஞர் வெட்டி கொலை.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பவன் யாதவ் என்பவர், திருப்பூர் பி.எம் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள நெசவாளர் காலனி பகுதியில் தங்கி டெய்லர் வேலை செய்து வருகிறார். அதே காம்ப்ளக்ஸில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திரதாரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று இரவு உபேந்திரதாரி, தன் மனைவியுடன், பவன் யாதவ் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு பவன் யாதவ் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அரிது நேரத்தில் இந்த வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த உபேந்திரதாரி, பவன் யாதவை அறிவாளால் வெட்டியுள்ளார். இதனால், பலத்த இரத்த காயமடைந்த பவன் யாதவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near tirupur police investigation to north state youth kill case


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->