திருப்பூர் : அரசு பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தயக்கம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லாபுரம் ஊராட்சி கொம்பேகவுண்டன்புதூரில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 56 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. 

இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. இந்த சம்பவத்தால் பெற்றோர்களும், மாணவர்களும் அச்சமடைந்துள்ளதால் பள்ளிக்கு செல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது:- "இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடந்த 2021-2022ம் ஆண்டிற்கான பள்ளி சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் செலவில் பழுதுபார்ப்பு, வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பணிகள் தரமாக செய்யப்படாததே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாகும். 

ஆகவே, இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு தரமான முறையில் புனரமைப்பு பணிகளை செய்யாத நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சேதம் அடைந்த பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரையை முழுவதுமாக சீரமைத்து தருவதற்கு முன்வர வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, "புனரமைப்பு பணிகள் நடைபெறும் போது பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளோ அல்லது பள்ளி நிர்வாகமோ முறையாக கண்காணித்திருந்தால் பணிகளும் தரமான முறையில் நடைபெற்றிருக்கும். மக்களின் வரிப்பணமும் வீணாகி இருக்காது. 

அதிகாரிகளின் அலட்சியத்தால், பொறுப்பற்ற தன்மையாலும் அரசுக்கு பொதுமக்களிடையே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirupur government school roof broke


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->