நெல்லை : விடுதியில் தற்கொலை செய்துகொண்ட வெளி மாநில சுற்றுலா பயணி - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் தமிழகத்தில் விடுதி ஒன்றில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் தங்கும் விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் ஒருவர் அறை எடுத்து தங்கியுள்ளார். ஆனால், அவர் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அந்த நபர் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் ஆந்திர மாநிலம் பிரகதிநகரை சேர்ந்த ஜிதேந்திர நாயுடு என்பதும், மருத்துவரான அவர் தனது உறவினர்களுடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் ஜிதேந்திர நாயுடு தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா பயணி ஒருவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirunelveli andira tourist sucide in hostel


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->