குற்றாலம் : செயற்கை நீர்வீழ்ச்சியை அகற்றும் பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் இயற்கை நீர்வீழ்ச்சிகள் உள்ளது. ஆனால் அங்குள்ள ஒருசில சொகுசு விடுதிகள் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாகியுள்ளது என்று, மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய தனியார் விடுதிகளை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட்டனர். மேலும் செயற்கை நீர்வீழ்ச்சி குறித்த அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

அந்த உத்தரவின் படி, தென்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள செயற்கையான நீர்வீழ்ச்சிகள் குறித்து ஆய்வு நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 

அதன் படி, குண்டாறு பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். 

இது குறித்த அறிக்கையை இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிப்பர். இந்த அறிக்கையை மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு அனுப்பிவைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near thenkasi artificial waterfall removel work start


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->