கட்டபொம்மன் பிறந்தநாள் விழா : தடையை மீறி பேரணி சென்றவர்கள் மீது தடியடி.! - Seithipunal
Seithipunal


இன்று தமிழகம் முழுவதும் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக கரூரில் ஒவ்வொரு வருடமும் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பில் சைக்கிளில் பேரணியாக சென்று அவரது சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். அப்போது அந்த கழகத்தை சேர்ந்தவர்கள் தேவராட்டம் ஆடியவாறு செல்வார்கள். 

அந்த வகையில் இன்று கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் பேரணி செல்வதற்கு ஏற்கனவே போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் அளித்து இருந்தனர்.

இதற்கிடையே கரூரில் ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடத்துவதற்கு போலீசார் விதித்துள்ள தடை தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. 

அந்த தடை இருந்தபோதிலும், இன்று காலை வழக்கம் போல் சைக்கிள் பேரணி செல்வதற்காக வீரபாண்டியன் பண்பாட்டுக்கழகத்தை சேர்ந்த இளைஞர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கரூர் தாலுகா அலுவலகம் அருகில் திரண்டனர். இதற்கு முன்னதாகவே அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். 

அவர்கள் அனைவரும் சைக்கிள் பேரணி செல்ல முயன்றவர்களிடம், தடையை மீறி பேரணி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் இளைஞர்கள் இதைகேட்கமால் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றனர். 

அதனால், போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியதால், பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்த அப்பகுதி போர்க்களம் போல் மாறி, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தை சேர்ந்தவர்கள் நான்கு திசையிலும் சிதறி அடித்து ஓடினர். 

இதைத்தொடர்ந்து, தாலுகா அலுவலகம் முதல் பேருந்து நிலையம் வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karoor police attack young mans for kattabomman birthday celebration cycle rally


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->