பிறந்தநாள் விழாவில் தகராறு.! மகனுடன் ரெயில் முன் தற்கொலைக்கு முயன்ற தாய்.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கம் செந்தில் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் மனைவி பிரேமலதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று பிரேமலதா தனது மூத்த மகனின் பிறந்தநாள் விழாவை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டாடினர். 

அப்போது திடீரென பிரச்சினை ஏற்பட்டதனால் குடும்பத்தினர்கள் பிரேமலதாவை கண்டித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த பிரேமலதா இன்று காலை, தனது இரண்டாவது மகனை அழைத்துகொண்டு ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். 

அதன் பின்னர் அவர் தன் மகனுடன் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தினர். இருப்பினும், ரெயில் மெதுவாக சென்று தண்டவாளத்தில் நின்ற பிரேமலதா மற்றும் அவரது மகன் மீது மோதியது. 

இந்த விபத்தில் அவர்கள் இருவரும் கீழே விழுந்ததில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காயமடைந்த இருவரையும் அதே மின்சார ரெயிலில் ஏற்றி தாம்பரம் வந்தனர். அதற்குள் இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அந்த தகவலின் படி, தாம்பரம் ரெயில் நிலையத்தில் தயாராக நின்ற ஆம்புலன்சு ஊழியர்கள் காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மகன் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட தகராறில் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai mother and son sucide attempt on train


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->