அமெரிக்கா சிகாகோவில் நவராத்திரி விழா...தமிழகத்தை சேர்ந்த ஹென்றி, செல்வன் மாறன் பங்கேற்பு!
Navaratri festival in Chicago USA Participation of Henry and Selvan Maran from Tamil Nadu
அமெரிக்க தேசம், இல்லினாய்ஸ் மாநிலம் சிக்காகோ புறநகர் பகுதியில் நடைபெற்ற நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணி மாநிலத் துணைச் செயலாளர் டாக்டர் ஆவின் பா.செல்வன், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, மாநிலத் துணைச் செயலாளர் திரு. S.மாறன் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நவராத்திரி விழாவுக்குக்கான ஏற்பாடுகளை மென்பொறியாளர் திரு.அறிவேந்தி - திருமதி.லாவண்யா அறிவேந்தி மற்றும் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் ஒன்று கூடி தெய்வீக பாடல்களை பாடி மகிழ்ந்தனர். விழாவின் நிறைவில் வருகை தந்த அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பேசிய டாக்டர் ஹென்றி இது போன்ற நவராத்திரி நிகழ்
ச்சிகள் சர்வதேச அளவில் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் இவ்வாறு கொண்டாடப்படுவதன் மூலம் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம், காக்கப்படுவதோடு தமிழ் உணர்வு மேலோங்கிடும், மேலும் தமிழின் அருமையும், பெருமையும் உலகெங்கும் பரவுவதற்கு இப்படிப்பட்ட விழாக்கள் சிறந்த உதாரணமாகவும் எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் அமையும் என தெரிவித்தார்.
மேலும் இவ்விழாவில் பேசிய டாக்டர் ஆவின் பா.செல்வன் அவர்கள் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் சார்பில் சிக்காக்கோ நகரை சுற்றி வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் திரு.அறிவேந்தி - திருமதி.லாவண்யா அறிவேந்தி குடும்பத்தினர் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
English Summary
Navaratri festival in Chicago USA Participation of Henry and Selvan Maran from Tamil Nadu