சிங்கள கடற்படை துப்பாக்கி சூடு, தாக்குதல் நடத்தி வெறிச்செயல் – நாகை மீனவர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


தமிழக எல்லையில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். பலத்த காயத்துடன் மீனவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைபேட்டை கவுதமன் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் அந்த பகுதியை சேர்ந்த கலைச்செல்வன்(வயது 33), தீபன்ராஜ்(32), ஜீவா(32), மாறன்(55), அரசமணி(31), முருகானந்தம் (35) மோகன் (40), ராமச்சந்திரன்(47), ஆனந்த்(30) உள்ளிட்டவர்கள் மீன் பிடிக்க கடந்த 28ம் தேதி ஆழ்கடலுக்கு சென்றனர். 

இவர்கள் வேதாரண்யம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நேற்று இரவு மீன் பிடித்து கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை காவல்துறையினர் தமிழக மீனவர்கள் மீது கொடுரமாக தாக்குதல் நடத்தி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் கலைச்செல்வன் பலத்த காயமடைந்ததுள்ளார். அதிர்ச்சியடைந்த மற்றவர்கள் கலைச்செல்வனை அழைத்துகொண்டு கீச்சாங்குப்பம் மீன்பிடி துறைமுகத்திற்கு விரைந்தனர். அங்கிருந்து நாகை அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

தமிழக எல்லையில் மீன் பிடித்த மீனவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிசூடு சம்பவம் அந்த பகுதி மீனவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagapattinam Akkaraipettai Fisherman Shot Tamilnadu Fisherman he Admit on Hospital to Treatment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->