கொலையா...? தற்கொலையா...? கடையம் அருகே பெரும் பரபரப்பு...! மாயமான த.வெ.க. நிர்வாகி மர்மமான முறையில் உயிரிழப்பு...! - காவலர்கள் தீவிர விசாரணை
Murder Suicide Huge commotion near shop mysterious TVk executive died mysteriously Police investigating intensively
தென்காசி மாவட்டம் கடையம் அருகே தனியார் கல்குவாரி குட்டையில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் த.வெ.க. நிர்வாகியாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.கடையம் அருகேயுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் சக்திவேல் (37). ஸ்டூடியோ தொழில் நடத்தி வந்த அவர், த.வெ.க. ஆலங்குளம் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றிய பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.

சக்திவேல், தெரசா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப வாழ்க்கை சுமுகமாக சென்று வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய சக்திவேல், அதன் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த சூழலில், கடையம் அருகே செயல்படாமல் மூடப்பட்டிருந்த தனியார் கல்குவாரி குட்டையில் நேற்று காலை சக்திவேலின் உடல் மிதந்த நிலையில் காணப்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடையம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.பின்னர் நீர்நிலையிலிருந்து உடலை மீட்ட அவர்கள், உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னரே சக்திவேலின் உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் வெளிச்சத்துக்கு வரும் என காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சொக்கலிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Murder Suicide Huge commotion near shop mysterious TVk executive died mysteriously Police investigating intensively