அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கம்.. திமுக அதிரடி....!! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ் தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார்.
தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் காணொளி வாயிலாக ஆலோசிக்கலாம் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், திமுக விவசாய அணியின் மாநில செயலாளராக இருந்த கே.பி.இராமலிங்கம் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் என்பது தேவையற்றது என்று அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கை திமுக வட்டாரத்திடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

மேலும், கட்சிக்காக பல நற்பணிகளை செய்து வந்த கே.பி.ராமலிங்கம் மக்களுக்காகவும் பல நல்ல விஷயங்களை செய்து வந்த நிலையில், இவரது அறிக்கை திமுக தலைமையில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் கே.பி. ராமலிங்கத்தை திமுக விவசாய அணி மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், தற்போது கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து, அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிடுவதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK stalin dismiss DMK party member KP Ramalingam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->