தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்குகிறார் உதயநிதி ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


நாட்டில் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் நேற்று தொடங்கினார்.

இதேபோல், தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட அமைச்சர்கள், தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதில் முதலாவதாக மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து இன்று காலை உதயநிதி ஸ்டாலின் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin start election campaign


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->