மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் இலவச பயணத்திற்கு அடையாள அட்டை வேண்டும் - அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " சென்னையில் சுமார் 1,800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பெண்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம். அவர்கள் அடையாள அட்டை எதனையும் காண்பிக்க தேவையில்லை. 

பேருந்துகளில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் தங்களின் அடையாள அட்டையை காண்பித்து பேருந்தில் இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம். அந்தந்த பகுதிகளை பொறுத்து தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதல் பேருந்துகள் தேவைப்படும் பட்சத்தில், கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். 

பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்தில் பயணம் செய்யும் மக்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும். இதனால் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கண்காணிக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Rajakannapan Pressmeet about Transgender and Physically Challenged Persons Free Pass Bus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->