கல்விக்கொள்கையை பின்பற்ற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் - அமைச்சர் பொன்முடி.!
minister ponmudi says should be full freedom given to state to follow the education policy
சென்னை மாவட்டத்தில் இந்திய கல்வி வளர்ச்சி குழுமம் சார்பில் உயர்கல்வியில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் AICTE தலைவர் சீதாராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது, அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

"தேசிய கல்வி கொள்கையில் சில நல்ல திட்டங்கள் இருப்பினும் அதில் உள்ள நுழைவு தேர்வு போன்றவற்றை தமிழக அரசு எதிர்க்கிறது. மாநிலங்கள் தங்கள் கல்வி கொள்கையை பின்பற்ற முழு சுதந்திரம் வழங்க வேண்டும்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் தங்களுக்கு என்று தனி கல்வி கொள்கையை வைத்துள்ளது" என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
English Summary
minister ponmudi says should be full freedom given to state to follow the education policy