மயிலாடுதுறை: புதிய சிடி ஸ்கேன் மையத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!! - Seithipunal
Seithipunal


சீர்காழி மருத்துவமனையில்  சிடி ஸ்கேன் மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் நேற்று மெகா தடுப்பூசி  முகாம் நடைபெற்றது. இந்நிலையில், மயிலாடுத்துறை மாவட்டம், சீர்காழியில் நடந்த தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறும் போது தமிழகத்தில் நடந்த தடுப்பூசி முகாமில் இலக்கை விட 18% அதிகம் தடுப்பூசி செலுத்தபட்டிருப்பதாக கூறினார். மேலும், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராமங்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கபடும் எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, சீர்காழி அரசு மருத்துவமனையில் புதிதாக அமைகப்பட்ட சிடி ஸ்கேன் மையத்தையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister launches new CT scan center


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->