சொத்து குவிப்பு வழக்கு - உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் திமுக அமைச்சர்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் பதவி வகித்தனர். இந்த காலக் கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. 

இதேபோல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவரது மனைவி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றதை அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து கிரிமினல் ரிவிசன் பெட்டிசன் என்ற அடிப்படையில் தனித்தனி வழக்குகளாக விசாரணைக்கு எடுத்து, குற்றம் சாட்டப்பட்ட இரு அமைச்சர்களை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணையை எதிர்த்து தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister kkssr ramachanthran and thangam thennarasu appeal supreme court


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->