இலங்கை கடற்படை தாக்குதலை தவிர்க்காத பட்சத்தில்.. அமைச்சர் ஜெயக்குமார் உச்சகட்ட எச்சரிக்கை.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " கடலுக்கு சென்றுள்ள மீனவர்களுக்கு செயற்கைகோள் அலைபேசியை வழங்கி வருகிறோம். இடநெருக்கடி காரணமாக திருவெற்றியூரில் 250 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித்துறைமுகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் நிறைவுபெறும். 

இதனால் 10 ஆயிரம் பேருக்கு பணிகிடைக்கும் சூழல் ஏற்படும். திமுகவின் ஆட்சிக்காலத்தில் மீனவர்களுக்காக 200 கோடி மட்டுமே ஒதுக்குவார்கள். தற்போது ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு மீனவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. 

இலங்கை கடற்படையினர் தாக்குதலால் மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்த தகவலை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுப்போம். இலங்கை அரசு இதுபோன்ற நடவடிக்கையை எடுப்பது தவிர்ப்பது நல்லது. 

மீனவர்கள் திசைமாறி செல்வது கிடையாது. காற்றின் அலையில் நீரோட்டம் காரணமாக இது நிகழ்கிறது. இவ்வாறு நிகழ்ந்தால் அவர்களை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்க வேண்டும். திருமாவளவனிற்கு நாங்கள் பயம் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Jayakumar press meet 28 October 2020 warning Srilankan Navy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->