சத்துணவு மையங்கள் மூடப்படுமா..?!! அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு அறவே கிடையாது என சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் "மாநிலம் முழுவதும் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளது. 

ஆனால் சத்துணவு மையங்கள் மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு அறவே கிடையாது. பள்ளியின் சத்துணவு மையங்களின் எண்ணிக்கை குறைப்பு, ஆட்கள் குறைப்பு போன்ற எந்த நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தை மேலும் வலுப்படுத்திடவும், கண்காணிப்பை தீவிர படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் யாருக்கும் எந்த ஐயமும் ஏற்படத் தேவையில்லை" என விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Geetha Jeevan explains nutrition centers will not be closed in TN


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->