பொய் பரப்பாமல் பிற வேலை கவனியுங்கள்.! ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து அமைச்சர் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் சட்டப்பேரவையானது கூட்டப்பட்டு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மக்களுக்கு தேவையான பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில்., டெல்டா பகுதியை அழிக்கும் நோக்கில் வரவுள்ள மத்திய அரசின் திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு ஆதரிக்கவில்லை என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சட்டப்பேரவையில் அவர் தெரிவித்தாவது., மத்திய அரசு அனுமதி அளித்தாலும்., மாநில அரசு ஒப்புதல் இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது. 

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்றும்., இப்போது வரை தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. 

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த விதமான செயல்பாடும் செய்ய முடியாது. ஹைட்ரோ கார்பன் திட்டம் அனுமதி செய்யப்பட்டார் போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி போராட்டம் நடத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முதன் முதலாக கையெழுத்திட்டு துவக்கிய கட்சி திமுக தான். அவர்களின் ஆட்சி காலத்தில்தான் இது நிறைவேற்றப்பட்டது என்பதை மறந்துவிட வேண்டாம் என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.  

Tamil online news

Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister CV shanmugam speech about hydro carbon problem in tn


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->