திடீரென அரசு பள்ளிக்குள் நுழைந்த அமைச்சர் - அதிர்ச்சியில் ஆசிரியர்கள்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வளாகம், கழிப்பறை, வகுப்பறை, குடிநீர் வசதி முறையாக உள்ளதா என்று ஒவ்வொரு பகுதியாகச் சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் உணவு தயாரிக்கும் கூடம் உள்ளிட்டவற்றுக்கும் சென்று சுகாதார முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா? என்றும் மாணவ-மாணவிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.

அதன் பின்னர், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ”நான் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள் கூட்டத்தில் பேசுகிறேன். 

இது பெருமையாக உள்ளது. நமக்கு என்று ஒரு இலக்கு நிர்ணயித்து அதன் வழியில் பயணிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து நாம் செயல்பட வேண்டும். சமுதாயத்தில் மாணவர்கள் அடுத்த கட்டம் செல்வதற்கு நீங்கள் முக்கிய பங்கு வைக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் ரகசியமாக திடீரென ஆய்வுக்கு வந்ததால் பள்ளியில் இருந்த ஆசிரியர்களிடையே பரபரப்பு நிலவியது. அதுமட்டுமல்லாமல், மாணவர்களிடமும் அவர் பாடங்களில் இருந்து கேள்வி எழுப்பி, அவர்களுக்கு கற்பிக்கப்பட்டவை குறித்து கேட்டு அறிந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister anbil makesh visit government schools in erode


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->