6000 நிவாரணத் தொகைக்கான டோக்கன் விநியோகம் - வெளியானது முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 

அதுமட்டுமல்லாமல், இந்த மழை வெள்ளத்தால் பொதுமக்களின் வாகனங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளும் சேதமடைந்தன. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

இதற்கான டோக்கன் வரும் 16-ந்தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த  நிலையில், முன்கூட்டியே இன்று முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளதாகவும் வரும் 17-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ.6,000 நிவாரணத் தொகையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

michaung cyclone relief token distribute from today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->