மாண்டஸ் புயல் : மெட்ரோ போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை - மெட்ரோ நிர்வாகம் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது.

அதற்கு மண்டாஸ் என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த நிலையில் தற்போது புயலாக வலுவிழந்தது. இந்த புயல் சென்னையில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. 

இந்நிலையில் மண்டாஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 85கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெட்ரோ ரெயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், வழக்கம்போல் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Metro train service will operate as usual in Chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->