'நான் அப்படி தாண்டீ குடிப்பேன்' குடித்துவிட்டு கணவன் செய்த காரியத்தால், பரிதவித்த மனைவி.! பாழாகிய குழந்தை.!  - Seithipunal
Seithipunal


ஊரடங்கினால் வேலையை இழந்த கணவர், மது போதைக்கு அடிமையாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை அம்பத்தூரில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ராம்தாஸ் என்பவருக்கும், தமிழ்ச்செல்வி என்பவருக்கும் 2014ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். மிகவும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த ராமதாசுக்கு ஊரடங்கு காரணமாக வேலை பறிபோனது. 

வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்த ராம்தாஸ் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஓசியில் குடிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் மனைவி தமிழ்ச்செல்வி அவரிடம் சண்டை போட்டுள்ளார். 

கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட, "குடித்து உடம்பை கெடுத்துக் கொண்டால் என்னாவது, நாங்கள் உங்களை தான் நம்பி இருக்கிறோம்." என்று தமிழ்ச்செல்வி அழுதுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்ட ராம்தாஸ், "நான் அப்படிதாண்டி குடிப்பேன். என்று கூறிவிட்டு குடிக்க பணம் கேட்டு நச்சரித்துள்ளார். 

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராம்தாஸ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஊரடங்கு காரணமாக வேலையை இழந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் மூன்று வயது கூட நிரம்பாத இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தமிழ்ச்செல்வி மிகுந்த வேதனையில் இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Men suicide in ambattur 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal