பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! கையும் களவுமாக பிடித்த போலீசார்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம், மேல்மலையனூர் அருகே உள்ள கிராமங்களில் கடந்த மாதத்தில் பூட்டி இருந்த வீடுகளை உடைத்தும் கத்தியை காட்டி மிரட்டியும் மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். 

இது தொடர்பாக வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். 

இந்நிலையில் அப்பகுதிகளில் இன்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அன்னமங்கலம் கூட்டு சாலையில் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். 

விசாரணையில் கடலூர் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 51) காட்டுக்கு கூடலூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (வயது 25) காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 25) என்பது தெரிய வந்தது. 

போலீசாரின் தொடர் விசாரணையில் இந்த 3 நபரும் மேல்மருவத்தூர் கிராம பகுதிகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் தொடர்புடையது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Melmalayanur locked houses robbers


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->