MBBS மற்றும் BDS மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி.? இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

மருத்துவ படிப்புகளுக்கு சிறப்புப் பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுப் பிரிவினருக்கு ஆன்லைனிலும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக, மீதமுள்ள இடங்கள் மாநில அரசு வசம் உள்ளன. அதேபோன்று, 20 தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.

தனியாா் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் நிா்வாக ஒதுக்கீடாகும். அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவா் சோக்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 2022-2023-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் (அக். 3 வரை) முடிவடைந்த நிலையில், இன்று (அக்டோபர் 6ம் தேதி) மாலை 5 மணி வரை கால அவகாசம் நிறைவடைகிறது.

மேலும், கீழ்க்கண்ட http://tnhealth.tn.gov.in, http://tnmedicalsection.org என்ற இணையதள பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MBBS and BDS online apply last day for today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->