திமுக பெண் நிர்வாகியிடம் ரூ.3 இலட்சம் மோசடி செய்த திமுக நிர்வாகி.. காவல்நிலையத்தில் புகார்..! - Seithipunal
Seithipunal


திமுக பெண் நிர்வாகியிடம் ரூ.3 இலட்சம் மோசடி செய்ததாக திமுக பிரமுகரின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நகரை சார்ந்தவர் சாந்தி. இவர் திமுக மயிலாடுதுறை மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ஆர்.எஸ் ஸ்ரீதர். திமுக மகளிரணியில் இருக்கும் சாந்தி, திமுக தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆர்.எஸ். ஸ்ரீதர் மீது மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிடம் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரில், " திமுகவில் மயிலாடுதுறை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவராக இருக்கும் ஆர்.எஸ் ஸ்ரீதர், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கூறைநாட்டில் செயல்பட்டு வரும் மதுபான கடை பார் ஏலம் வருகிறது என்றும், இதனை எனக்கு எடுத்து தருகிறேன் என்றும் தெரிவித்தார். மேலும், இதற்காக ரூ.3 இலட்சம் தொகையையும் கேட்டார். 

அவரின் மீது இருந்த நம்பிக்கையால் நானும் பணம் கொடுக்க ஒப்புக்கொண்டேன். இதனையடுத்து, அவரது உதவியாளர் செந்தில் என்பவர் எனது வீட்டில் வந்து ரூ.3 இலட்சம் பணம் வாங்கி சென்றார். இதன்பின்னர் பார் குறித்த தகவல்கள் இல்லை. 

பலமுறை அவர்களிடம் பணத்தை திரும்பி கேட்டும் கொடுக்காத நிலையில், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி பணத்தை கொடுக்க முடியாது என ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தை மீட்டு தர வேண்டும் " என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி சாந்தி தெரிவிக்கையில், " பண மோசடி விவகாரம் குறித்து திமுக மாவட்ட செயலாளர், நகர செயலாளர் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை. இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இனியாவது கட்சி தலைமை பிரச்சனையை தீர்க்க வழிவகை செய்ய வேண்டும் " என்று தெரிவித்தார். 

திமுக நிர்வாகி, திமுக பெண் நிர்வாகியிடம் மோசடி செய்த சம்பவம் உட்கட்சி பிரச்சனையை அம்மாவட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai DMK Supporter Forgery Co Supporter Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->