கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்..!! - Seithipunal
Seithipunal


கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், நொய்யல் நதி கரையில் அமைந்துள்ள கொடுமணலில் நடைபெற்றூ முடிந்த அகழாய்வு பணியை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்.

முதற்கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட 2500 ஆண்டுகளுக்கு முந்தைய  கிணறு, உருக்காலை, வர்த்தகம் செய்த இடங்கள் மற்றும் சமாதி  ஆகியவை கண்டறியப்பட்டது. இதனையும் அங்கு கிடைத்த பொருட்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த அகழாய்வுக்கு நிதி ஒதுக்கப்படுள்ளதாகவும் அடுத்த கட்ட அகழாய்வு தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அகழாய்வில் கிடைக்கின்ற பொருட்களை மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் காட்சிபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Materials found in the Kotumanal will be on display


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->