காலையில் திருமணம்.. மாலையில் புதுப்பெண் ஓட்டம்!
Marriage in the morning New bride race in the evening
காலை திருமணம் நடந்த நிலையில், மாலையில் புதுப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெரம்பூர் அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அகிலன், நாகவள்ளி தம்பதியினரின் மகள் அர்ச்சனா. 20 வயதான இவருக்கும் மாதவரம் பர்மா காலனியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் நேற்று பெசன்ட் நகர் தேவாலயத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து திருமணம் முடிந்து மணமக்கள் இருவரையும் பெண் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.காலை திருமணம் முடிந்து நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், அர்ச்சனா மதியம் பியூட்டி பார்லருக்கு சென்று வருவதாக கூறி வெளியே வெளியே சென்ற அர்ச்சனா மாலை வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் புதுப்பெண் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரிக்க தொடங்கினர். அப்போது அர்ச்சனா ஏற்கனவே காதலித்து வந்த எருக்கஞ்சேரியை சேர்ந்த கலையரசன் என்பவருடன் சென்றுவிட்டதாக தெரியவந்தது. இதனையடுத்து அர்ச்சனாவை மீட்டு தருமாறு தாய் நாகவள்ளி திரு.வி.க. நகர் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஓட்டம் பிடித்த காதல் ஜோடி குறித்து விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர். காலை திருமணம் நடந்த நிலையில், மாலையில் புதுப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Marriage in the morning New bride race in the evening